முன்னொரு காலத்தில் வருடம் தவறாமல் இத்திருவிழாவை காண வந்துகொண்டிருந்த தொட்டாச்சாரியார் என்ற பக்தரால் ,ஒரு முறை முதுமை காரணமாக வர இயலாத காரணத்தால் பகவானே அவர் இருக்கும் " கடிகாசலம்" என்று அழைக்கப்படும் "சோளிங்கர்" என அறியப்படும் தலத்திற்கு சென்று கருடவாகனத்தில் காட்சி அளித்தார் என கூறப்படுகிறது. அம்மகானை பெருமை படுத்தும் வண்ணம் மேற் கூறிய சமயம் வரதரின் முகம் மறைத்து அவர் சோளிங்கரில் தொட்டாசாரியருக்கு சேவை அளிக்கும் வைபவம் இன்றும் பின் பற்றப்படுகிறது.
பக்தனுக்காக பகவான் காட்டும் பரிவிற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் இந்த திருவிழாவிலே இந்த வருடம் நடை பெற்ற ஒரு சம்பவம் பக்தர்கள் மட்டும் அன்றி மனிதாபிமானம் உள்ள அனைவரையும் வருத்தம் கொள்ள வைத்திருக்கிறது .
வைணவத்தின் முதன்மையான இரு உட்பிரிவுகளான வடகலை மற்றும் தென்கலை இவற்றிற்கு இடையே நடைபெற்றுவரும் மோதலால் பாதிக்க பட்டவர்கள் ஸ்ரீ பாதம் தாங்கிகள் என அழைக்கப்படும் பல்லக்கு தூக்கிகள் palanquin bearers .
இறைவன் ஒருவனே அவன் எல்லாவற்றிகும் பொதுவானவன் என்ற சிறிய , சிறந்த உண்மையைக்கூட உணராதவர்கள் அர்ச்சகர்கள் எனும் பெயரில் , இறைவனை தொட்டு , ஆராதிக்கும் வாய்ப்பை பெற்றும் , தமது ego வினால் தமக்குள்ள சண்டை இட்டு கொண்டு இறைவனின் திரு வீதி உலா புறப்பாடாமல் தடங்கல் செய்தனர்.
நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் ஸ்ரீ பாதம் தாங்கிகள் எவ்வாறு வெய்யிலில் வெறும் காலுடன் செல்ல இயலும் ?என்ற மனிதாபிமான சிந்தனை துளியும் இல்லாமல் வைஷ்ணவர்கள் என்று தம்மை பறை சாற்றிகொள்ளும் இந்த மூடர்கள் காலம் கடத்திய செய்தி அனைவரையும் உறைய வைக்கிறது.
பின்பு ஒருவாறாக தமக்குள் சமாதானம் செய்து கொண்டு திரு வீதி உலாவிற்கு அனுமதி அளித்தனர்.
வெயிலினால் நிர்ணயிக்கபட்ட பாதையில் செல்ல முடியாமல் பாதி வழியிலே ஊர்வலம் திரும்பியது.
இதனால் ஏற்பட்ட இழப்புகள்.
1. முடியாதவர்களுக்காக ( உடலாலும் , மதத்தினால் வேறுபடுவதால் கோயிலுக்கு செல்ல இயலாதவர்களுக்காக ) அவர்களின் வீதி தேடி வந்து இறைவனின் தரிசனம் கிடைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திரு வீதி உலா அதன் பயன் இழந்தது.
2. ஆன்மிகம் என்ற உயர்ந்த ஒரு பொருளின் வெளிப்பாடான உற்சவங்களை ஆத்திகர்கள் , அர்ச்சகர்கள் என கூறி கொள்பவர்கள் கேலி பொருள் ஆக்கியது.
3. அடிப்படை தேவையாகிய மனிதாபினம் கேள்விகுறி ஆகியது .
காஞ்சி நகராளும் வரதரே !
இந்த போலி ஆன்மீக வாதிகள் , ஒரு சாதாரண மனிதரை விட தாழ்வான சிந்தனையுடன் நடந்து கொண்டு தங்களுக்கும், தாங்கள் சார்ந்த சமயத்திருக்கும் தங்களுடைய ஆணவத்தால் ஒரு களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
அறியாமல் தவறு செய்பவர்களை மன்னிக்கும் இறைவா!
இவர்கள் அறிந்தே செய்கிறார்கள் , அதனால் அனுமதியாதே வரதா
வேண்டுகோளுடன்
தாசன் பாலாஜி
