Saturday, October 11, 2014

உண்மையான கர்ம வீரர்கள்

சமீபத்தில் நடை பெற்ற தமிழக புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி , சிந்தனையை  சில வருடங்கள் பின்னோக்கி செலுத்துகிறது.

1984 - ல் திருமதி. இந்திரா காந்தி சுடப்பட்டு இறந்தவுடன், ஒரு அசாதாரண சூழ்நிலையில் திரு. ராஜீவ் காந்தி தலைமையில் புதிய மத்திய அமைச்சரவை பதவியேற்றது.

சொந்த அன்னையின் இறப்பின் போதும் , மன உறுதியுடன் திரு.ராஜீவ் கலக்கத்தை வெளிப்படுத்தாமல் பதவி ஏற்றது வியப்புக்குரியது.  மரணம் என்பது மீள வழி இல்லாத பாதை என்ற போதும் , தான் ஏற்கப்போகும் பொறுப்பின் தன்மை உணர்ந்து சொந்த சோகத்தினை வெளிப்படுத்தாதது போற்றுதலுக்குரியது.

ஆனால் செல்வி.ஜெயலலிதா விஷயத்தில் ஏற்பட்டிருப்பது ஒரு தேக்கமே.  மீள முடியாத சோகம் அல்ல. ஆனாலும் அழுகையின் அளவை பொறுத்து அங்கீகாரம் கிடைக்கும் என்ற நிலை தெரிகிறது.

தாங்கள் ஏற்கப்போவது ஒரு மாநிலத்தின் ஆட்சி பொறுப்பு. விருப்பு , வெறுப்பு ஏதுமின்றி தங்கள் கடமையை செய்வோம் என கூறும்போதே உள்ளம் வெதும்பி, கண்கள் கலங்கி , தாம் ஏற்கும் பொறுப்பிற்கும் , நமது அரசியல் சாசனத்திற்கும் ஒரு விரும்பதகாத களங்கத்தை மாண்புமிகுக்கள் ஏற்படுத்தி விட்டார்கள்.

இவற்றை அருகிலிருந்து கண்டும், சிறிதும் சிரிக்காமல் , கடமையே கண்ணாக இருந்த ஆளுநர் அலுவலக அதிகாரிகள் மற்றும்  தமிழக அரசின் அதிகாரிகளே உண்மையான கர்ம வீரர்கள்.