ஸ்ரீமான். ஸ்ரீநிவாசன் (பாட்டாளி) :
காஞ்சி வரதனின் கோயில் மணியமாக சேவை செய்து, அத்திவரதர் வைபவத்தில்,பெரும் பங்கு ஆற்றும் பேறு பெற்றவர்.
கீதை மொழிக்கேற்ப, தனது கைங்கர்யத்தில் மிகுந்த சிரத்தையுடன்,பலன் கருதாது,சிரமங்கள் பலவானபோதும்,உறுதியடன்,பகவத் கைங்கர்யமும்,பாகவத கைங்கர்யமும்,குறை ஒன்றுமில்லாமல்,தனது உடல்நலம் குறைவானபோதும்,நிறைவேற்றியவர்.
இந்த ஆண்டு வரதனின் பழைய சீவரம் பாரி வேட்டைக்கு, கோயில் மணியமாக,தன் பணிக்குண்டான பொறுப்பினை, வரதன் பழைய சீவரம் செல்லும் வரை நிறைவேற்றியவர்.
நேற்று காலை, வரதனை காண பழைய சீவரம் மலை ஏறி சென்றவுடன்,பகவானின் திருக்கருணை பயனாக,தனது பூத உடலை விடுத்து ,அவன் சன்னதியில் அவர் ஆன்மா, அவன் திருவடி சேர்ந்தது.
பக்தனை சோதிப்பது பகவானுக்கு அழகோ? மணியத்துடன் மலை ஏறிய தேவாதிராஜன், தனித்து திரும்புவது அழகோ ? என வேதனை கேள்விகள் ஏராளம்... ஏராளம்...
அதற்கு அடியேனின் சிறு விளக்கம்.
தேவாதிராஜன் தனித்து திரும்பவில்லை. தனது மனதிற்கினிய மணியத்தை ,கைங்கர்ய மாணிக்கத்தை தன்னுள் அணைத்து திரும்புகிறான்.
பெருமானின் புகழை விடவும், அடியாரின் புகழ் பெரிதன்றோ?
கூரம் திருவாழி சுந்தரம் முகுந்த ராமானுஜ தாசன்


