சென்ற வாரம் தமிழகமே அதிர்ச்சிக்குள்ளான இரு முக்கிய சம்பவங்கள் நடைபெற்றன. கோவையில் மனித போர்வையில் நடமாடிய இரு மிருகங்கள் அரங்கேற்றிய வெறி செயல்களும், சென்னையில் உறவினர் மகனை கடத்திய படிப்பாளிகளின் செயல்களும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் அனைத்து பெற்றோருக்கும் கவலை தர கூடியதாக இருந்தது.
2004 சுனாமியை போன்று இத்தகைய சம்பவங்கள் முதல் முறையாக நடைபெற்றால் அரசை குறை கூறி பயன் இல்லை.
ஆனால் இவை அன்றாட நிகழ்வுகளாக இருப்பதால் அரசின் மெத்தனம் நிதர்சனமாக தெரிகிறது.
எந்த ஒரு வருத்தமும், தார்மீக பொறுப்பும் இல்லாமல் , அன்றைய தினம் நடை பெற்ற ,அரசின் செலவில் கட்டப்பட்ட கட்டடத்தின் திறப்பு விழாவிற்கு முக்கிய சாலைகளில் காணப்பெற்ற வரவேற்பு தட்டிகளை காணும்போது
மனிதாபிமானத்தை மறப்பது மாண்பு மிகு ஆவதற்கான தகுதியா என எண்ண தோன்றுகிறது.
நம்முடைய உடன் பிறந்தவர் வீட்டில் நடந்த துக்கம் போல் பாமர மக்கள் பாவிக்கும் பொழுது ஆள்பவர்கள் எந்த வித கூச்சமும் இல்லாமல் சுய தம்பட்டத்தில் ஈடுபடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அல்லவா இருக்கிறது?
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்பது இதற்காகத்தானா ?
வருத்தங்களுடன்
முகுந்தன்
Sunday, November 7, 2010
Friday, July 30, 2010
வீணாக்குவதா வெற்றி ?
தற்போதைய கால கட்டத்தில் விலைவாசி உயர்வு என்பது நியாயப்படுத்த முடியாவிட்டாலும் தவிர்க்க முடியாததாகிறது. ஆள்பவர்களின் நிர்வாக திறமையின்மை, வாக்கு வங்கியை கவர இலவசம் என்ற பெயரில் கையாளும் மலிவான தந்திரங்கள் , கடன் சுமை உள்ளபோதும் மிகுந்த பொருட்செலவில் நடத்தப்படும் விழாக்கள் போன்ற காரணங்களினால் அளவில் சிறியதாக இருந்த பற்றாக்குறை (deficit) தற்பொழுது அசுர வளர்ச்சி பெற்று இருக்கிறது.
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமக்கு தோன்றும் வழிகளில் எல்லாம் ஆடம்பர செலவுகளை செய்வதால் , அவற்றை ஈடு கட்ட வரிச்சுமை பொதுமக்களின் மீது விழுகிறது.
இவை அனைவருக்கும் எளிதில் புரிகின்ற உண்மை.
ஆனால் ஒரு அரசியல் கட்சியானது எதிர்கட்சி வரிசையில் அமரும்போது, விலை வாசி உயர்வை காரணமாக வைத்து BANDH எனப்படும் ஒரு மிகப் பெரிய நாடகத்தை அரங்கேற்றும். ஆளுங்கட்சியும் தமது பலத்தை நிரூபிக்க ஏதேனும் ஒரு பொது காரணத்திற்காக முழு வேலை நிறுத்தம் செய்யும்.
மக்களை சிந்திக்க வைக்கவே கூடாது என்ற முடிவிலிருக்கும் பெரும்பான்மையான பத்திரிகைகள் , முழு அடைப்பினை தாம் சார்ந்திருக்கும் கட்சியின் நிலைக்கேற்ப முழு வெற்றி என்றோ அல்லது பந்த் பிசுபிசுத்தது என்றோ பறை சாற்றும்.
சில கேள்விகள்
1.விலை வாசி உயர்வை எதிர்த்து செய்யப்பட்ட பந்த் முழு வெற்றி என்றால் ,அரசு ஏற்றிய விலையை இறக்கியதா ?
2. இலங்கை போரின்போது அரசு மேற்கொண்ட மனித சங்கிலி முழு வெற்றி என்றால் அதனால் போர் நின்றதா ?
ஒவ்வொரு கட்சியின் பலத்தை கொண்டே பந்தின் வெற்றி, தோல்விகள் நிர்ணயிக்கபடுகின்றன. மக்களின் முழு ஆதரவுடன் எந்த ஒரு கதவடைப்பும் நடைபெறுவதில்லை.
ஏன் என்றால்
௧. மக்களில் பெரும்பாலானோர் ஒரு நாள் பணி நிறுத்தம் செய்வதால் எந்த மாற்றமும் நடைபெறபோவதில்லை என்பதை நன்கு அறிவார்கள் .
௨. அன்றைய தினம் உழைத்தால் தான் வருமானம், உணவு என்ற நிலையில் அதிகப்படியானோர் உள்ளனர்.
ஆகையால் ஆளும் கட்சியோ , எதிர்கட்சியோ எவை பந்த் நடத்தினாலும் அவை மக்களுக்காக அல்ல. மக்களை வதைப்பதற் காகவே.
ஒரு daily labour வருமானத்தை பறிப்பதை பற்றி வருத்தப்படாதவர்கள் , தமது வருமானத்தற்கு எந்த குறைவுமின்றி பார்த்துகொள்கிரார்கள்.
கட்சியினரால் நடத்தப்படும் எந்த ஒரு தொலைக்காட்சியோ, தினப்பத்திரிகையோ பந்த் நடக்கும் நாளன்று தமது செயல்பாட்டை நிறுத்துவதில்லை. மாறாக "உலக தொலைகாட்சிகளில் முதல் முறையாக" என்று புதிய படங்களை திரை இட்டு தமது வருமானத்தை இரட்டிப்பாக்குகின்றன.
அக்கட்சிகளை அண்டிப்பிழைக்கும் பத்திரிகைகளோ ,பந்த் வெற்றி என்றும், தோல்வி என்றும் certificate கொடுத்து மக்களின் கவனம் அவர்களின் அன்றைய இழப்பின் மீது செல்லாமல் பாதுகாக்கின்றன.
அண்ணல் காந்தியடிகள் தம்மை வருத்தி , பொது மக்களுக்கு தொந்தரவு இல்லாமல், நடத்தியவையே போராட்டங்கள்.
தமக்கு எந்த பொருள் இழப்பும் ஏற்படாமல் , பிறரின் வயிற்று பிழைப்பை பற்றி அக்கறை கொள்ளாமல் , தம்முடைய வளர்ச்சிகாக இந்த கட்சிகள் நடத்தும் பந்த், ஆர்பாட்டம் போன்றவை பகை நாட்டின் படை எடுப்பை விட கொடுமையானது.
செயல்படாத ஒன்றை செயல் பட வைத்தால் அது வெற்றி ஆகும்.
செயல்படும் ஒன்றை முடக்குவது எவ்வாறு வெற்றியாகும் ?
ஜன நாயகத்தின் தூண்களில் ஒன்றான பத்திரிகைகள் இவற்றை கிள்ளி எரியாமல் நீர் ஊற்றி வளர்க்கும் போது,
நாமும் ஒரு நாளை வீணாக்குவதுதான் வெற்றி என்று கொள்ள வேண்டுமோ ?
வினாவுடன்

Saturday, May 29, 2010
அறிந்தே செய்கிறார்கள் அனுமதியாதே வரதா
கடந்த வாரம் முதல் காஞ்சி மா நகரில் வரதராஜரின் வைகாசி மகோற்சவம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அதில் மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது மூன்றாம் நாள் அதிகாலை நடைபெறும் கருட சேவை உற்சவம் ஆகும். இன்றும் தொடரும் ஒரு நம்பிக்கை என்னவென்றால் , வரதர் கருட வாகனத்தில் கோபுர வாசல் தாண்டும் பொழுது சிறிது நேரம் அவர் திருமுகத்தை மறைப்பார்கள் .
முன்னொரு காலத்தில் வருடம் தவறாமல் இத்திருவிழாவை காண வந்துகொண்டிருந்த தொட்டாச்சாரியார் என்ற பக்தரால் ,ஒரு முறை முதுமை காரணமாக வர இயலாத காரணத்தால் பகவானே அவர் இருக்கும் " கடிகாசலம்" என்று அழைக்கப்படும் "சோளிங்கர்" என அறியப்படும் தலத்திற்கு சென்று கருடவாகனத்தில் காட்சி அளித்தார் என கூறப்படுகிறது. அம்மகானை பெருமை படுத்தும் வண்ணம் மேற் கூறிய சமயம் வரதரின் முகம் மறைத்து அவர் சோளிங்கரில் தொட்டாசாரியருக்கு சேவை அளிக்கும் வைபவம் இன்றும் பின் பற்றப்படுகிறது.
பக்தனுக்காக பகவான் காட்டும் பரிவிற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் இந்த திருவிழாவிலே இந்த வருடம் நடை பெற்ற ஒரு சம்பவம் பக்தர்கள் மட்டும் அன்றி மனிதாபிமானம் உள்ள அனைவரையும் வருத்தம் கொள்ள வைத்திருக்கிறது .
இறைவன் ஒருவனே அவன் எல்லாவற்றிகும் பொதுவானவன் என்ற சிறிய , சிறந்த உண்மையைக்கூட உணராதவர்கள் அர்ச்சகர்கள் எனும் பெயரில் , இறைவனை தொட்டு , ஆராதிக்கும் வாய்ப்பை பெற்றும் , தமது ego வினால் தமக்குள்ள சண்டை இட்டு கொண்டு இறைவனின் திரு வீதி உலா புறப்பாடாமல் தடங்கல் செய்தனர்.
நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் ஸ்ரீ பாதம் தாங்கிகள் எவ்வாறு வெய்யிலில் வெறும் காலுடன் செல்ல இயலும் ?என்ற மனிதாபிமான சிந்தனை துளியும் இல்லாமல் வைஷ்ணவர்கள் என்று தம்மை பறை சாற்றிகொள்ளும் இந்த மூடர்கள் காலம் கடத்திய செய்தி அனைவரையும் உறைய வைக்கிறது.
பின்பு ஒருவாறாக தமக்குள் சமாதானம் செய்து கொண்டு திரு வீதி உலாவிற்கு அனுமதி அளித்தனர்.
வெயிலினால் நிர்ணயிக்கபட்ட பாதையில் செல்ல முடியாமல் பாதி வழியிலே ஊர்வலம் திரும்பியது.
இதனால் ஏற்பட்ட இழப்புகள்.
1. முடியாதவர்களுக்காக ( உடலாலும் , மதத்தினால் வேறுபடுவதால் கோயிலுக்கு செல்ல இயலாதவர்களுக்காக ) அவர்களின் வீதி தேடி வந்து இறைவனின் தரிசனம் கிடைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திரு வீதி உலா அதன் பயன் இழந்தது.
2. ஆன்மிகம் என்ற உயர்ந்த ஒரு பொருளின் வெளிப்பாடான உற்சவங்களை ஆத்திகர்கள் , அர்ச்சகர்கள் என கூறி கொள்பவர்கள் கேலி பொருள் ஆக்கியது.
3. அடிப்படை தேவையாகிய மனிதாபினம் கேள்விகுறி ஆகியது .
காஞ்சி நகராளும் வரதரே !
இந்த போலி ஆன்மீக வாதிகள் , ஒரு சாதாரண மனிதரை விட தாழ்வான சிந்தனையுடன் நடந்து கொண்டு தங்களுக்கும், தாங்கள் சார்ந்த சமயத்திருக்கும் தங்களுடைய ஆணவத்தால் ஒரு களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
அறியாமல் தவறு செய்பவர்களை மன்னிக்கும் இறைவா!
இவர்கள் அறிந்தே செய்கிறார்கள் , அதனால் அனுமதியாதே வரதா
வேண்டுகோளுடன்
தாசன் பாலாஜி

வைணவத்தின் முதன்மையான இரு உட்பிரிவுகளான வடகலை மற்றும் தென்கலை இவற்றிற்கு இடையே நடைபெற்றுவரும் மோதலால் பாதிக்க பட்டவர்கள் ஸ்ரீ பாதம் தாங்கிகள் என அழைக்கப்படும் பல்லக்கு தூக்கிகள் palanquin bearers .
இறைவன் ஒருவனே அவன் எல்லாவற்றிகும் பொதுவானவன் என்ற சிறிய , சிறந்த உண்மையைக்கூட உணராதவர்கள் அர்ச்சகர்கள் எனும் பெயரில் , இறைவனை தொட்டு , ஆராதிக்கும் வாய்ப்பை பெற்றும் , தமது ego வினால் தமக்குள்ள சண்டை இட்டு கொண்டு இறைவனின் திரு வீதி உலா புறப்பாடாமல் தடங்கல் செய்தனர்.
நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் ஸ்ரீ பாதம் தாங்கிகள் எவ்வாறு வெய்யிலில் வெறும் காலுடன் செல்ல இயலும் ?என்ற மனிதாபிமான சிந்தனை துளியும் இல்லாமல் வைஷ்ணவர்கள் என்று தம்மை பறை சாற்றிகொள்ளும் இந்த மூடர்கள் காலம் கடத்திய செய்தி அனைவரையும் உறைய வைக்கிறது.
பின்பு ஒருவாறாக தமக்குள் சமாதானம் செய்து கொண்டு திரு வீதி உலாவிற்கு அனுமதி அளித்தனர்.
வெயிலினால் நிர்ணயிக்கபட்ட பாதையில் செல்ல முடியாமல் பாதி வழியிலே ஊர்வலம் திரும்பியது.
இதனால் ஏற்பட்ட இழப்புகள்.
1. முடியாதவர்களுக்காக ( உடலாலும் , மதத்தினால் வேறுபடுவதால் கோயிலுக்கு செல்ல இயலாதவர்களுக்காக ) அவர்களின் வீதி தேடி வந்து இறைவனின் தரிசனம் கிடைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திரு வீதி உலா அதன் பயன் இழந்தது.
2. ஆன்மிகம் என்ற உயர்ந்த ஒரு பொருளின் வெளிப்பாடான உற்சவங்களை ஆத்திகர்கள் , அர்ச்சகர்கள் என கூறி கொள்பவர்கள் கேலி பொருள் ஆக்கியது.
3. அடிப்படை தேவையாகிய மனிதாபினம் கேள்விகுறி ஆகியது .
காஞ்சி நகராளும் வரதரே !
இந்த போலி ஆன்மீக வாதிகள் , ஒரு சாதாரண மனிதரை விட தாழ்வான சிந்தனையுடன் நடந்து கொண்டு தங்களுக்கும், தாங்கள் சார்ந்த சமயத்திருக்கும் தங்களுடைய ஆணவத்தால் ஒரு களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
அறியாமல் தவறு செய்பவர்களை மன்னிக்கும் இறைவா!
இவர்கள் அறிந்தே செய்கிறார்கள் , அதனால் அனுமதியாதே வரதா
வேண்டுகோளுடன்
தாசன் பாலாஜி
Subscribe to:
Posts (Atom)