Saturday, December 3, 2011

அர்த்தமுள்ள சாஸ்திரம்

நாட்டை சமீபத்தில் உலுக்கி கொண்டிருக்கும் பிரச்சனை சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு. மக்கள் மத்தியில் தம்முடைய presence ஐ நிலை நிறுத்திக்கொள்ள அனைத்து எதிர், துணை கட்சிகளும் தமது ஆழ்ந்த ? வருத்தத்தையும் அக்கறையையும் போராட்டங்கள் வாயிலாகவும், அறிக்கை ,பேட்டிகள் மூலமும் வெளிப்படுத்தி வருகின்றன.

சிறிது நாட்களுக்கு முன் ஒரு நாளேட்டில்,திமுகவும் , திரிணமுல் காங்கிரசும் லோக் சபாவில் அரசிற்கு ஆதரவாக வோட்டளிக்க போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்விரு கட்சிகளும் வெளியில் எதிர்ப்பை தெரிவித்தாலும் சுய லாபத்திற்காக இந்த முடிவெடுத்தால் வியப்பதற்கு இல்லை.

காரணம், திமுகவிற்கு கடந்த சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் ஆதரவளிக்கவில்லை. மேலும் 2 G வழக்கிலும் மத்திய அரசின் உதவி மிகவும் தேவைப்படுகிறது. தற்பொழுதுதான் பெயில் என்னும் சிறு வெளிச்சம் கடந்த 6 மாத இருட்டை போக்கி இருக்கிறது.

மகளின் நலமா ? மக்களின் நலமா ? என்னும் கேள்வி வரும்போது ஆதரவளிக்காத மக்களைகாட்டிலும் அருமை மகளே முக்கியமாக தெரிவதில் வியப்பென்ன ? மேலும் சில்லறை வர்த்தகம் பாதிக்கபடுவதால் இவர்களின் எந்த ஒரு business உம பாதிக்கப்பட போவதில்லை.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும்  , அப்பாவி தொண்டர்கள் இருக்கும் வரை, ஊருக்காக எதிர்த்து , உறவுக்காக அடிபணிவதுதான் தற்போதைய சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்.  

 வணக்கங்களுடன்
 கே.ட்டி .எஸ். முகுந்தன்