Saturday, November 29, 2014

இனியாவது தப்பிக்குமா எங்கள் மடங்கள் ?



திராவிடர் மற்றும் திராவிட முன்னேற்ற கழகங்களின் உணவுகளுக்கு அவ்வபோது ஊறுகாயாக பயன்படுவது " சங்கர மடம்  ஆகும் ". தங்களின் உட்கட்சியில் எப்போதெல்லாம் குழப்பம் ஏற்படுகின்றதோ , அப்போதெல்லாம் தங்களின் பலவீனத்தை மறைக்க சங்கர மடத்தை வம்புக்கிழுப்பது வாடிக்கையாகும்.

இதில் வேடிக்கை என்ன வென்றால் " வாரிசுகளை நியமிக்க எங்கள் கட்சி ஒன்றும் சங்கர மடம் அல்ல " என்னும் பொன்மொழி அடிக்கடி இடம் பெரும். சங்கர மடத்திலோ , வேறு எந்த ஹிந்து மடங்களிலோ , தமது சொந்த வாரிசை அடுத்த பீடாதிபதியாய்  நியமிக்கும் வழக்கம் இல்லை.  இருப்பினும் அவற்றை மேற்கோள் காட்டி தமது பகுத்தறிவை அடிக்கடி பறை சாற்றி கொள்வது கழகங்களின் வாடிக்கை.

சமீபத்தில் டெல்லி இமாம் , தமது மகனை அடுத்த வாரிசாக நியமித்து உள்ளார். இது எந்த கழகத்தின் கண்களையும் உறுத்தவில்லை. கேள்வி கேட்கப்படாவிட்டாலும் , கேள்வியும், பதிலும் தாமே எழுதும் கலைஞரும், ஹிந்து மதத்தின் சிறு அசைவுகளுக்கும் , வேப்பேரியில் மேடை போட்டு வீர வசனம் பேசும் வீரமணியாரும், மெய் சுருக்கி, வாய் மூடி , மௌன சாமியார்களாக மாறி விட்டனர்.

" சிறுபான்மை ஆதரவு " என்பது " பெரும்பான்மையினரை சிறுமைப்படுத்துவதே" என்ற உ(ள )யரிய நோக்கத்துடன் , சிறுபான்மையினரை விமர்சித்தல் மதச்சார்பின்மைக்கு விரோதம் என்ற விந்தை தத்துவமும் சேர்ந்து , கழக பேனாக்களையும், பிரசார பீரங்கிகளையும் கட்டி போட்டிருக்கிறது.

இனியாவது இவர்கள் எமது சங்கர மடங்களை மன்னித்து மேற்கோள் காட்டாமல் ,கருணை காட்டுவார்களா ?

அன்பன்

K.T.S.Mugundan

Saturday, October 11, 2014

உண்மையான கர்ம வீரர்கள்

சமீபத்தில் நடை பெற்ற தமிழக புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி , சிந்தனையை  சில வருடங்கள் பின்னோக்கி செலுத்துகிறது.

1984 - ல் திருமதி. இந்திரா காந்தி சுடப்பட்டு இறந்தவுடன், ஒரு அசாதாரண சூழ்நிலையில் திரு. ராஜீவ் காந்தி தலைமையில் புதிய மத்திய அமைச்சரவை பதவியேற்றது.

சொந்த அன்னையின் இறப்பின் போதும் , மன உறுதியுடன் திரு.ராஜீவ் கலக்கத்தை வெளிப்படுத்தாமல் பதவி ஏற்றது வியப்புக்குரியது.  மரணம் என்பது மீள வழி இல்லாத பாதை என்ற போதும் , தான் ஏற்கப்போகும் பொறுப்பின் தன்மை உணர்ந்து சொந்த சோகத்தினை வெளிப்படுத்தாதது போற்றுதலுக்குரியது.

ஆனால் செல்வி.ஜெயலலிதா விஷயத்தில் ஏற்பட்டிருப்பது ஒரு தேக்கமே.  மீள முடியாத சோகம் அல்ல. ஆனாலும் அழுகையின் அளவை பொறுத்து அங்கீகாரம் கிடைக்கும் என்ற நிலை தெரிகிறது.

தாங்கள் ஏற்கப்போவது ஒரு மாநிலத்தின் ஆட்சி பொறுப்பு. விருப்பு , வெறுப்பு ஏதுமின்றி தங்கள் கடமையை செய்வோம் என கூறும்போதே உள்ளம் வெதும்பி, கண்கள் கலங்கி , தாம் ஏற்கும் பொறுப்பிற்கும் , நமது அரசியல் சாசனத்திற்கும் ஒரு விரும்பதகாத களங்கத்தை மாண்புமிகுக்கள் ஏற்படுத்தி விட்டார்கள்.

இவற்றை அருகிலிருந்து கண்டும், சிறிதும் சிரிக்காமல் , கடமையே கண்ணாக இருந்த ஆளுநர் அலுவலக அதிகாரிகள் மற்றும்  தமிழக அரசின் அதிகாரிகளே உண்மையான கர்ம வீரர்கள். 

Saturday, April 5, 2014

உஸ்... அப்பா என்ன வெய்யில் ....

கத்திரி வெய்யில் துவங்குவதற்கு முன்பே வெப்பம் இப்படி சுட்டெரிக்கிறதே என அனைவரும் ஒருமித்த குரலில் கூறுகின்றோம்.

வெளியில் அளவாக தலைகாட்டும் நமக்கே இப்படி என்றால், சுட்டெரிக்கும் வெய்யிலில் சூறாவளி பிரசாரம் செய்து வரும் நமது தலைவர்கள் இதனால் எவ்வாறு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என சற்று பார்ப்போமா ?

சொன்னதும் ( சொல்லப்போவதும் )

முதல்வர் , மற்றும் வைகை செல்வன் உட்பட கழக பேச்சாளர்கள் :

தமிழ்நாட்டில் மின்வெட்டா ? எதிர்கட்சிகள் பொய் பிரசாரம் .( நான் வந்த Helicopter fan கூட நன்றாக சுற்றியது . Current இல்லாவிட்டால் இவ்வாறு சுற்றுமா ?)


கலைஞர் :

Congress மதவாத பாதையில் இருந்து திரும்பினால் ஆதரவு அளிப்போம் . ( மன்மோகன் சிங் தாடி வளர்த்து,  டர்பன் அணிந்து தன்னை ஒரு சீக்கிய மதவாதியாக காண்பித்து கொண்டதால் congress உடன் கூட்டணி இல்லை )


விஜயகாந்த் :

விருதுநகர், விஜயகாந்த் , வைகோ, வெற்றி, வாழ்த்து - 5 V க்கள் ( நான் சொன்ன  5 "V" இவைதான் - வெட்டிபேச்சு , வீண் விவாதம் , வெறுப்பு, வயிற்று எரிச்சல் , விட்டால் போதும் )

பொன். இராதாகிருஷ்ணன் :

கூட்டணிக்குள் சிறு சல சலப்பு ஏற்படுவது இயற்கை தான் ( நான் சொன்ன கூட்டணி நான், இல.கணேசன், தமிழிசை , வானதி ஸ்ரீனிவாசன் )

Top and Super most : சிரிக்காமல் படிக்கவும் 

ஞான தேசிகன் மற்றும் நாராயணசாமி :

Congress அனைத்து  தொகுதிகளிலும்  வெற்றி பெறும்  ( நாங்கள் சொன்ன வெற்றி வேட்பாளர்களை தேடி கண்டுபிடித்து நிறுத்துவோம் என்பதுதான் - ஞான தேசிகன் , சொன்னபடி 15 நாட்களுக்குள் நிறுத்தி விட்டோம் - நாராயணசாமி )

வணக்கங்களுடன்
K.T.S.Mugundan