Saturday, December 3, 2011

அர்த்தமுள்ள சாஸ்திரம்

நாட்டை சமீபத்தில் உலுக்கி கொண்டிருக்கும் பிரச்சனை சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு. மக்கள் மத்தியில் தம்முடைய presence ஐ நிலை நிறுத்திக்கொள்ள அனைத்து எதிர், துணை கட்சிகளும் தமது ஆழ்ந்த ? வருத்தத்தையும் அக்கறையையும் போராட்டங்கள் வாயிலாகவும், அறிக்கை ,பேட்டிகள் மூலமும் வெளிப்படுத்தி வருகின்றன.

சிறிது நாட்களுக்கு முன் ஒரு நாளேட்டில்,திமுகவும் , திரிணமுல் காங்கிரசும் லோக் சபாவில் அரசிற்கு ஆதரவாக வோட்டளிக்க போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்விரு கட்சிகளும் வெளியில் எதிர்ப்பை தெரிவித்தாலும் சுய லாபத்திற்காக இந்த முடிவெடுத்தால் வியப்பதற்கு இல்லை.

காரணம், திமுகவிற்கு கடந்த சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் ஆதரவளிக்கவில்லை. மேலும் 2 G வழக்கிலும் மத்திய அரசின் உதவி மிகவும் தேவைப்படுகிறது. தற்பொழுதுதான் பெயில் என்னும் சிறு வெளிச்சம் கடந்த 6 மாத இருட்டை போக்கி இருக்கிறது.

மகளின் நலமா ? மக்களின் நலமா ? என்னும் கேள்வி வரும்போது ஆதரவளிக்காத மக்களைகாட்டிலும் அருமை மகளே முக்கியமாக தெரிவதில் வியப்பென்ன ? மேலும் சில்லறை வர்த்தகம் பாதிக்கபடுவதால் இவர்களின் எந்த ஒரு business உம பாதிக்கப்பட போவதில்லை.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும்  , அப்பாவி தொண்டர்கள் இருக்கும் வரை, ஊருக்காக எதிர்த்து , உறவுக்காக அடிபணிவதுதான் தற்போதைய சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்.  

 வணக்கங்களுடன்
 கே.ட்டி .எஸ். முகுந்தன்






1 comment:

  1. ஒரு நல்ல கருத்து. மக்கள் எப்போதாவது அவர்கள் தேசப்பற்று தெரிவிக்க நேரம் காண்கின்றன. இளைஞர்கள் அரசியலை வெறுக்கின்றன. மக்கள் அரசியலை வெறுக்கின்றன. தேர்தல் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும். Even if a party comes to power, they work hard to shift buildings or stop projects. When is the government planning to serve the people. Its since 60 years of independence, we are moving like a snail. it is now time for us to hitch our wagon towards a star.

    ReplyDelete