Saturday, April 9, 2011

அவ்வளவு பெரிய தலைவரா இந்த அன்னா ஹசாரே ?

கடந்த ஒரு வாரமாக அனைத்து ஊடகங்களும், ( தமிழை தாங்கிபிடிக்கும் கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சி நீங்கலாக) அன்னா ஹசாரேவை பற்றிய செய்திகளை முதன்மையாகவோ , இடை செருகலாகவோ வெளியிட்டன . அதிலும் குறிப்பாக ஆங்கில செய்தி chanelgal  மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
அவ்வளவு பெரிய தலைவரா  இந்த அன்னா ஹசாரே ?

ஒரு பாமர தமிழனாக கீழ் காணும் கேள்விகளுக்கு விடை தெரியாததால் அன்னா ஹசாரே பற்றி இவ்வாறு எண்ண தோன்றுகிறது

௧. எமது தானை தலைவரைப்போல் எந்த ஒரு சிக்கலையும் தீர்கவல்ல  " பிரதமருக்கு கடிதம் " எழுதாமல் உண்ணாவிரதம் என்னும் புளித்து போன ஆயுதத்தை உபயோகிக்கும் இவரா பெருந்தலைவர்?

௨.எமது முத்தமிழ் அறிஞர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இலங்கை போரை எதிர்த்து காலை தொடங்கிய உண்ணாவிரதம் அவர் பேரப்பிள்ளை தயாநிதி அவர்களாலும் மற்றும் அவர் கொள்கைகளை பரப்பும்  ஆ. ராசா அவர்களாலும் மெருகேற்றப்பட்ட தொலை தொடர்பினால் இலங்கைக்கு செய்தி அனுப்பி போர் நிறுத்தப்பட்டது என உடன் பதில் பெற்று உண்ணாவிரதத்தை உடனே முடித்த வித்தையை அறியாத  இவரா பெருந்தலைவர்?

௩.அயல் நாட்டிற்கே உடனுக்குடன் தகவல் பரிமாறிகொள்ளும் எம் தலைவர் பெரியவரா? இல்லைபிரதமர் இருக்கும் அதே டெல்லியில் இருந்து கொண்டு இன்னும் நல்ல பதில் வரவில்லை என உண்ணாவிரதத்தை தொடரும் இவர் பெரியவரா ?

௪.மீண்டும் ஒரு சில லட்சம் மக்களே இறந்த போது அதை போரின் தொடர்ச்சி என முட்டாள்கள் சொன்னபோது அது மழை விட்டும் தூவானம் விடவில்லை என கலை நயத்தோடு சொன்ன எம் தலைவரின் கலை திறன் கொஞ்சமும் கற்றறியாத  இவரா பெருந்தலைவர்?

௫.இதில் இவருக்கு கல்யாணமும் ஆகவில்லையாம், வாரிசுகளும் இல்லையாம் , சொத்தும் ஏதும் இல்லையாம் atleast  ஒரு உடன் பிறவா சகோதரன் கூட இல்லையாம். பொதுவாழ்க்கைக்கு தேவையான எந்த வித அடிப்படை தகுதிகளும் இல்லாத இவர் பொது பிரச்சனையை முன்னிறுத்துவது வேடிக்கையாகும். 

௬.பொது மக்களுக்கு உழைப்பது ,அவர்கள் நல்வாழ்வு ஒன்றே குறிக்கோள் என்று தன்னலம் கருதாமல்  வாழும் மானிட குல , மகளிர் குல மாணிக்கங்கள்  குஷ்பூ, வடிவேலு, சிங்கமுத்து ,செந்தில் போன்றோருக்கு கூடுவதைபோல் போயும் போயும் இவருக்கும் கூட்டம் வருகிறதே? எனன கொடுமை sir இது ?

௭.நாட்டின் முக்கியமான பிரச்சனைகளான 

இட ஒதுக்கீடு , உள் ஒதுக்க்கீடு, உள்ளுக்குள் ஒதுக்கீடு , முட்டாள் தனமாக கணவரை நச்சரித்து சோர்ந்து போன  தாய்மார்களின் உற்சாகதிற்கான grinder , mixie , fan , fridge மட்டும் இன்னும் கண்டுபிடிக்கபடாத பொருட்கள், ஆடுகள் போன்றவற்றை இலவசமாக தருவதற்கு எதிர்க்கும் படித்த அறிவிலிகளின் வழக்குகள் , வாக்களிப்பதை விட வாக்கிற்கு பணம் பெறுவதே வாக்காளர்களின் உரிமை என்னும் உயர்ந்த கொள்கைக்கு இடையூறாகும் election commission செயல்பாடுகள்,etc  etc 

இவற்றில் எதற்காகவும்  இல்லாமல்  மனிதர்களின் ரத்தத்தின் ரத்தமாக, உயிர் காற்றாக கலந்து விட்ட ஊழலை ஒழிப்போம் என ஒன்றுக்கும் உதவாத ஒன்றிற்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் இவரா பெருந்தலைவர்?
 

போராட்டமென்றால் ஒரு பஸ் எரியவேண்டாமா?  சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ குறைந்தது மூன்று பேராவது சாக  வேண்டாமா ? சாலைகளை சிதைக்க மரங்களை வெட்ட வேண்டாமா ? இவை எல்லாவற்றையும் விட atleast  பேச்சின் போது உருட்டி காட்ட விழிகளும், முறுக்கி காட்ட மீசையும் இல்லாத இவரா பெருந்தலைவர்?

௮.உலகிற்கு மற்றுமொருமுறை பூஜ்ஜியத்தின்  பெருமையை உணர்த்த 176 க்கு பிறகு 7 பூஜ்ஜியங்கள் போட்டு ( 1760000000 )  சாதனை செய்த ராசாக்களைவிட இவர் பெருந்தலைவரா ? விளையாட்டிற்கான பணத்தை விளையாட்டாக செலவு செய்யும்  கல்மாடிகளை விடவா  விட இவர் பெருந்தலைவரா ?

௯.மக்களுக்காக சேவை செய்ய தன் மனைவிக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் மக்களின் கதி எனன ஆகுமோ என அஞ்சி தொலை நோக்குடன் தன்னை ஒரு சாதாரண தொண்டனாக நினைத்து அவர்களுக்கு வழங்கப்படும் dummy வேட்பாளர் பொறுப்பை தன் தோளில் சுமக்கும் தியாகிகள் அணியும் குல்லாவை அணிய எனன துணிச்சல் இந்த மனிதருக்கு ? 

இந்த பித்துபிடித்தவரின் பின்னால் இத்தனை பிழைக்க தெரியாத கூட்டம் ?  நம்மூர் பிரசாரத்திற்கு வந்தாலாவது உண்ண உணவும், குடிக்க நன்னீரும் ,செலவுக்கு பணமும் கிடைக்கும். முட்டாள் மக்கள் இந்த சுவை அறியாமல் அந்த தள்ளாத கிழவர் பின் செல்கின்றனர். 

இந்த கேள்விகளுக்கு பதில் இல்லாதவரை 
தானை தலைவர், புரட்சிதலைவி, புரட்சிகலைஞர், தமிழ்குடிதாங்கி, புரட்சிப்புயல், வைகைபுயல், தென்னாட்டு பிரபாகரன், தங்கபாலு, இளங்கோவன் போன்றோரே எமது பெருந்தலைவர்கள் .

என்றும் அன்புடன்
கே.டி.எஸ்.முகுந்தன்
9884087424 



 

1 comment:

  1. Sir idu enna vanja pugazchiya..?.!.illa ennadu?...enna daan solla varinga.?..pls tell openly and clearly....

    ReplyDelete